தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இதன்பின் நகைச்சுவை கலந்த ஆக்சன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால், அரசியலில் களமிறங்கிய பின்னர், சமூக அக்கறையுடன் நெஞ்சுக்கு நீதி மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார். இதில், மாமன்னர் தனது கடைசி படம் எனக் கூறி சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது துணை முதலமைச்சராக உள்ளார்.

இதனிடையே, சினிமா பிரபலங்கள் தங்களது படப்பிடிப்பு அனுபவங்களை அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில், தற்போது ஜீ தமிழ் வாரிசு சீரியல் கதாநாயகி நடித்தவர் ஸ்வேதா.
இவரின் சமீபத்திய பேட்டியில், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த அனுபவத்தை அதில் பகிர்ந்து உள்ளார். அதில், அவர் இப்படை வெல்லும் படத்தின் படப்பிடிப்பில் கோவிலுக்கு மேல் கலசத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நின்று கொண்டு படப்பிடிப்பு நடந்தது.

அது ட்ரோன் ஷாட் என்பதால் அங்கு யாரும் இல்லை. நான் ராதிகா, உதயநிதி ஸ்டாலின் மற்றும் என் தங்கையாக நடித்தவர் மட்டுமே இருந்தோம். காலில் செருப்பு இல்லை செம வெயில். செமையாக கொதித்தது, என்னால் நிற்க முடியவில்லை. இதை பார்த்துவிட்டு என் கால் மீது ஏறி நில் என உதயநிதி ஸ்டாலின் சொன்னார்.

இல்ல சார் வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், என்னால் வெயில் சூட்டை தாங்க முடியவில்லை. இல்லம்மா பரவால்ல என் கால் மீது ஏறி நில்லுங்க என மீண்டும் சொன்னார் என படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் நடிகை ஸ்வேதாபகிர்ந்து கொண்டார்.

