சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியை தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார்.

அதன் பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனத் தொடர்ந்தது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர் இருவருக்கும் அரண்மனையில் திருவிழா போன்று இவர்களது, திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் முடிந்த பிறகு முதலில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஹன்சிகாவும் அவரது கணவரும்.

அப்பொழுது, அடிக்கடி பிரச்சினை ஏற்பட தனிக்குடித்தனம் சென்று பார்க்கலாம் என்று புது வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் குடியேறினார்கள். ஆனால், தனிக்குடித்தனம் சென்றும், பிரச்சனைகள் ஓய்ந்த பாடு இல்லை. இதையடுத்து, நாம் சேர்ந்து வாழ்ந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்து விடலாம் என்று இருவரும் முடிவு எடுத்து தற்போது மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர்.

முன்னதாக, நடிகை ஹன்சிகா ஹன்சிகாவுக்கும் அவரின் காதல் கணவரான சோஹேல் கதுரியா விவாகரத்து வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணமான கையோடு பிரச்சனை ஏற்படவே அதுவே விவாகரத்தில் முடிந்து விட்டதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக ஹன்சிகா Amritsar தங்க கோவிலுக்கு சென்று பக்தியுடன் வழிபட்டு இருக்கிறார்.


