லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார். லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் வேற லெவலில் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

லெஜெண்ட் சரவணனின் உழைப்பு இப்படத்தில் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர். தற்போது, சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி இந்து திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கும் லெஜெண்ட் சரவணன் தனக்கு பிடித்த இயக்குனர் நெல்சன் தான் என்றும், அவரை என்னும் ஐந்து வருடங்களுக்கு பிடிக்க முடியாது. அவ்வளவு பிஸியாக அவர் இருக்கிறார்.

அதனால், அவரது படத்தில், ஒரு கேஸ்ட்டு ரோலாவது கொடுங்க நெல்சன் 2, 3 நாள் சூட்டிங் இருந்தாலும் சரி பண்ணிடலாம் என லெஜென் சரவணன் வெளிப்படையாக கேட்டுள்ளார். மேலும், தனது மூன்றாவது படத்தில் 3 ரோல்களில் நடிக்கப் போவதாகவும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.

