Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»விஜய்க்கு விழுந்த ஆஃபர்.. 90 தொகுதிகளுடன் துணை முதல்வர் பதவி.. ஆதவ் கொடுத்த அப்டேட்!
    தமிழ்நாடு

    விஜய்க்கு விழுந்த ஆஃபர்.. 90 தொகுதிகளுடன் துணை முதல்வர் பதவி.. ஆதவ் கொடுத்த அப்டேட்!

    Prime ReporterBy Prime ReporterMarch 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay gets an offer.. Deputy Chief Minister's post with 90 seats.. Update from Adhav!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியல் களத்தில் தேர்தல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், புதிய திருப்பங்களும், அதிரடி விளக்கங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாக களம் இறங்குவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதற்கிடையில், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றிருந்த விஜய், அங்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முக்கிய தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவிய நிலையில், த.வெ.க. தரப்பில் இருந்து உடனடி மறுப்பு வெளிவந்தது. கூட்டணி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர்.

    இந்நிலையில், பாஜக – த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல்கள் மீண்டும் வெளியாகியதால், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

    கொளத்தூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். எங்களது நிலைப்பாடு தெளிவானது. பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு ‘ஆஃபர்கள்’ எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டன. குறிப்பாக 90 தொகுதிகள் வழங்கப்படும் என்றும், மேலும் ஆட்சி அமைந்தால் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு பேரங்கள் பேசப்பட்டன. ஆனால், அவற்றை அனைத்தையும் விஜய் முற்றிலும் நிராகரித்துவிட்டார்,” என்று உறுதியாக தெரிவித்தார்.

    Vijay gets an offer.. Deputy Chief Minister's post with 90 seats.. Update from Adhav!

    மேலும், “அதிகாரம் அல்லது பதவிக்காக டெல்லிக்கு தலைவணங்கும் அரசியல் எங்களுடையது அல்ல. த.வெ.க. தனது தனித்துவ அரசியல் பாதையில் தான் பயணிக்கும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இந்த விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், த.வெ.க. உண்மையில் தனித்து போட்டியிடுமா, அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மீண்டும் எழுந்துள்ளது.

    Aadhav Arjuna Actor Vijay CM Stalin DMK Politics ஆதவ் அர்ஜூனா தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்.. விஜய்யின் அதிரடி அரசியல் அட்டாக்..!

    April 8, 2026

    திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!

    April 8, 2026

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    April 7, 2026

    பரப்புரைக்கு வராத விஜய்.. ஆர்.கே.நகர் பாணியில் வித்தை செய்த TVK வேட்பாளர்..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    இனி போன் நம்பர் தேவையில்லை! வாட்ஸ்அப்பில் ‘யூசர்நேம்’ வசதி அறிமுகம் – முழு விபரங்கள்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026
    Don't Miss

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.