தவெக சார்பாக தமிழக அரசை கண்டித்து, ஆதவ் அர்ஜூனா பேசும் போது, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அவருக்கு அடுத்தபடியாக விஜய் தான் உள்ளார்.
திமுகவின் மிரட்டலுக்கு பயந்து ரஜினி அரசியலை விட்டே விலகினார். ஆனால் விஜய்க்கு வலிமை உள்ளது என பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தது.
மேலும் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் ரஜினி திடீர் அறிக்கை வெளியிடடுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜூனா என்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்தை தெரிவிததுள்ளார். அவருடைய கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர் ரகுபதி, நண்பர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி என குறிப்பிடட் ரஜினி, காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், தவெக தலைவர் விஜய் இதுவரை ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. இனி ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

