ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதேபோல், தவெகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

இதில், தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் விஜய் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனை அடுத்து, விஜய், திரிஷா இணைந்த வீடியோ இணையதளத்தில் சமீபத்தில் வெளியாகி பலரும் வன்மையாக கண்டித்தனர்.

அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளன அந்த வகையில், நடிகர் ஜான் விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். சக நடிகனாக எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அரசியலுக்கு வருபவர்களை நாம் என்றுமே ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்களை தொடர்ந்து குறை கூறிக் கொண்டே இருக்கக் கூடாது.

என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் பொதுவாக ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் விவாதிப்பது என்பது தேவையில்லாத விஷயம். ஒவ்வொருவரும், அவரவர் வீட்டில் என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தாலே போதுமானது.

விஜய் தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசினால் அது சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விஷயமாகவும் இருக்கும். விஜய் தன்னுடைய பாத்ரூமில் என்ன செய்கிறார் என்பது குறித்து பேசுவதற்கு நாம் யாருக்குமே தகுதி கிடையாது. அந்த விஷயம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது என்பது இங்கிதம்: இல்லாத செயல் என்றுதான் நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

