சமீபத்தில் இப்தார் நோன்பு திறப்பு விழா அம்பத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் நோன்பு திறக்கும் நேரத்தில் உணவருந்த தயாரான போது யாருக்கும் தெரியாமல் தொப்பியை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு வாயிலிருந்து ஏதோ ஒன்றை ரகசியமாக எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

இதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் என அவர் நினைத்திருந்த நிலையில், அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி மன்சூர் அலிகான் வாயிலிருந்து என்ன எடுத்தார் எதை எடுத்தார் நோன்பில் இப்படி செய்யலாமா? என பலவிதமான கமெண்ட்கள் இணையதளத்தில் பரவியது.

இதற்கு விளக்கம் கொடுத்துள்ள மன்சூர் அலிகான் எனக்கு சொத்தை பல் இருப்பதால் ப ஒரு ஸ்க்ரூவை பொருத்து இருந்தேன். அது திடீரென கழுண்டு விட்டதால், தொப்பியை வைத்து மறைத்தபடி அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு மன்சூர் அலிகான் வாயிலிருந்து என்ன எடுத்தார் என கேட்கிறார்கள் வாயில் இருந்து லிங்கத்தை எடுக்க நான் என்ன பிரேமானந்தாவா? இல்லை நித்தியானந்தா வா? நான் என்னமோ போதைப்பொருள் பயன்படுத்தியது போல எழுதுகிறார்கள்.

என் உடம்பில் போதை மருந்து, போதை பொருட்கள் தொடர்பான எந்தவித பொருட்களும் பயன்படுத்தியது இல்லை என்னை டெஸ்ட் செய்யுங்கள், அப்படி, ஏதாவது ஒரு அறிகுறி என் உடம்பில் இருந்தால், அதே இடத்தில் நான் தூக்கு போட்டு தொங்கி விடுகிறேன். நான் போதைக்கு எதிராக சரக்கு என்ற படத்தை எடுத்தவன். மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். சொல்பவர்கள் 1000 சொல்லிவிட்டு போகட்டும். அதைப்பற்றி எனக்கு வருத்தம் இல்லை என்று மன்சூர் அலிகான் செய்தியாளரிடம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

