பொதுவாக எந்த கல்யாணத்துக்கு போனாலும் அதிகப்படியாக சுவைப்பது வத்த குழம்பு இந்த வத்த குழம்பு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தனி ஸ்டைல் உண்டு. அந்த வகையில் நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்த குழம்பு மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டில் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
- ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு
- ஒரு ஸ்பூன் மல்லிவிதை,
- ஒரு ஸ்பூன் உளுந்து
- ஒரு ஸ்பூன் வெந்தயம்,
- ஒரு ஸ்பூன் மிளகு
- ஒரு ஸ்பூன் அரிசி
- ஒரு கொத்து கருவேப்பிலை
- நான்கு காய்ந்த மிளகாய்
- ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- ஒரு ஸ்பூன் கடுகு,
- கால் கப் உலர் சுண்டைக்காய்
- 5 பல் பூண்டு
- 2 வெங்காயம்
- ஒரு தக்காளி
- ஒரு டீஸ்பூன் பெருங்காயம்,
- நெல்லிக்காய் அளவு புளி
- ஒரு டீஸ்பூன் உப்பு
- 50 கிராம் வெல்லம்
செய்முறை

Step 1: முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றினை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மேலும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து புளி கரைசலை எடுத்து தனியாக வைக்கவும்.
Step 2: தற்போது வத்த குழம்பு பொடி தயார் செய்வதற்கு அடுப்பில் கடாயினை வைத்து அதில், கடலைப்பருப்பு துவரம் பருப்பு, மல்லி விதை, அரிசி, வெந்தயம், உளுந்து, மிளகு சேர்த்து பதமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து இதனை வதக்கவும்.
Step 3: வறுத்த பொருட்கள் அனைத்தையும், மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது, வத்த குழம்பு செய்வதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்கவும். கடுகு, கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து இந்த கலவையை நன்றாக தாளிக்கவும்.
Step 4: வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி பெருங்காயம், புளி கரைசல் உப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
Step 5: வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதித்த பின் இறுதியாக வெல்லத்தை பொடியாக இடித்து குழம்புடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால், சூப்பரான ருசியான கல்யாண வீட்டு வத்த குழம்பு தயார்.

