திருப்பூரில் வீடுகளுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை வர்த்தக சிலிண்டர்களும் அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக வழங்கப்படும் என பாரத் கேஸ் மாநில விநியோகஸ்தர் சங்க தலைவர் சாமிவேலு பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு பாரத் கேஸ் மாநில விநியோகத்தர் சங்க தலைவர் சாமி வேலு திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சிலிண்டர் தட்டுப்பாடு என்ற தகவல் தொடர்ந்து பரவி வருகிறது வீடுகளுக்கான சிலிண்டர் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு என செய்திகள் வெளியான பிறகுதான் அதிகளவிலான புக்கிங் வருகிறது. இப்பொழுது பொதுமக்களுக்கு சிரமம் இன்றி சிலிண்டர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு ஒரு நாட்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்கான பாலிசி உருவாக்கப்படும் பின்னர் அதன்படி வணிக சிலிண்டர்களும் தொடர்ந்து தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சாதாரணமாக ஒரு டீலரிடம் 100 சிலிண்டர்கள் புக் ஆகும் என்றால் தற்பொழுது தட்டுப்பாடு என்று செய்தி பரவிய நிலையில் 500 சிலிண்டர்கள் புக் ஆகிறது.
இதனால் பீக் ஹவர்களில் புக்கிங் கிடைப்பதில்லை. இது தவறாக புக்கிங் நடப்பதில்லை என்று பரப்பப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக நேரடியாக அலுவலகத்திற்கு வருகிறார்கள். இவையும் இரண்டு ஒரு நாட்களில் சீரமையும். ஒவ்வொரு டீலரிடமும் இரண்டு நாட்களுக்கான சிலிண்டர்கள் கையில் இருக்கும் மொத்தமாக 40 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் முழுமையாக கையிருப்பு உள்ளது.
ஒவ்வொருவரும் கேட்கும் அளவிலான சிலிண்டர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது இதில் எந்த தடையும் இல்லை அதற்குள்ளாக இந்திய அரசு கேஸ் இறக்குமதி செய்து முழுமையாக விநியோகம் செய்து விடுவார்கள். புக்கிங் டெலிவரி என அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படுகிறது அதனால் நேரம் முதற்கொண்டு அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் இதில் எந்தவிதமான முறைகேடும் தவறான தகவல்களும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

