தற்போது நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருவது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. சிலிண்டர் தட்டப்பாட்டால் நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் சமைப்பதே பெறும் பிரச்சினையாக கூட மாறலாம்.
இந்த நிலையில், அடுப்பும், சிலிண்டரும் தேவைப்படாத சில உணவுப் பொருட்களை முயற்சித்து சிலிண்டர் பிரச்சினையை ஓரளவுக்கு குறைக்கலாம். பொதுவாக இட்லி அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருந்தாலும், அதை அடுப்பில்லாமல் சமைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான்.
இட்லியை நீங்கள் அடுப்பே இல்லாமல் சமைக்க முடியும். ஆனால், இது வழக்கமான இட்லி போல் இருக்காது. அதைவிட கூடுதல் சூப்பரான இட்லியாக தான் இருக்கும். அடுப்பே தேவைப்படாத சூப்பரான சட்னியும், இட்லியும் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
இட்லி செய்வதற்கு
- ஒரு கப் அவுல்
- ஒன்றரை கப் தேங்காய் பால்
- தேவையான அளவு உப்பு
சட்னி அரைக்க
- கால் கப் தேங்காய்
- 20 சின்ன வெங்காயம்
- நான்கு வரமிளகாய்
- ஒரு தக்காளி
- ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம்
செய்முறை
Step 1: முதலில் இட்லியை செய்வதற்கு அவுலை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி திக்கான தேங்காய்ப்பால் ஒரு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மிகவும் கெட்டியாக இருந்தாலும், மேலும் தேங்காய் பால் சேர்த்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.
Step 2: இந்த இட்லி மாவு வழக்கமான இட்லி மாவு போல தண்ணீர் பதத்தில் இருக்கக் கூடாது. எனவே கொஞ்சம் கெட்டியாகவே மாவை பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து, இட்லி பானையில் இட்லி ஊற்றுவது போல் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் வைக்க வேண்டும். இதை ஒரு மூடி போட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். கொஞ்ச நேரத்தில் இது நன்கு இறுகி மிருதுவான இட்லியாக மாறிவிடும்.
Step 3: முதலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், வரமிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து சிறிது சிறிதாக நீரூற்று மென்மையாக அதே சமயம் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். அவ்வளவுதான் அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான இட்லியும் சுவையான சட்னியும் தயார்.

