பொள்ளாச்சி புதிய திட்ட சாலை மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், எமன் வேடம் அணிந்து போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் சாலை விபத்துகளில் இறந்தால் உடனடியாக இறப்பு நேரிடும் என்பதை எமன் அழைத்துப் போவது போல பல்வேறு நிகழ்ச்சிகளை நடித்து காட்டினர்.
வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிய வேண்டும் மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது போக்குவரத்து விதி மீறல்கள் ஈடுபடக்கூடாது என பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து காவல்துறையினர் வழங்கினர்.

