Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா உயிரெடுக்கும் விஷ உணவா? அன்புமணி தாக்கு!
    தமிழ்நாடு

    மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா உயிரெடுக்கும் விஷ உணவா? அன்புமணி தாக்கு!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    This is the only way to eliminate the cylinder shortage… Anbumani's idea for the DMK government!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் திமுக அரசை வன்மையாக கண்டித்து வருகின்றன.

    அந்த வகையில், பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் மயக்கம்: மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா உயிரெடுக்கும் விஷ உணவா?

    கோவை மாநகரம், கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ – மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    நல்வாய்ப்பாக அனைத்து மாணவர்களும் உயிர் பிழைத்து விட்ட போதிலும், அவர்களுக்கு ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

    கோவை மாநகராட்சி பள்ளிகளின் சமையலறைகள் தூய்மையின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் அதன் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நடைமுறை கூட இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறதா அல்லது நச்சு உணவு வழங்கப்படுகிறதா? என்பதே தெரியவில்லை. இந்த நிகழ்வுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அதை தமது சாதனையாக காட்டிக் கொண்டு, விளம்பரங்களை வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்காதது ஏன்? மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்தது குறித்து முதலமைச்சரோ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, சமூகநலத்துறை அமைச்சரோ இது வரை வாயைத் திறக்காதது ஏன்? இந்த நிகழ்வு குறித்து யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்க அரசு முயன்றது ஏன்?

    சத்துணவில் பல்லி விழுந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தரமான சத்துணவு வழங்கப்படுவதையும், குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவை சுவைத்துப் பார்ப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK Politics அரசியல் அன்புமணி திமுக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.