நடிகர் விஜய் விவகாத்து வழக்கு மற்றும் த்ரிஷா பற்றிய விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே அதிகமாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது.
இந்நிலையில், த்ரிஷாவை நடிகர் பார்த்திபன் தாக்கி பேசிய நிலையில், அவருக்கு ட்விட்டரில் த்ரிஷா பதிலடி கொடுத்திருந்தார். அதனை அடுத்து, பார்த்திபன் மன்னிப்பு கேட்டு வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விஜயை மறைமுகமாக நடிகர் மன்சூர் அலிகான் தாக்கி பேசியுள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இப்தார் நோம்பு திறப்பு விழாவில் பேசிய மன்சூர் அலிகான் தனது மனைவியை வலுக்கட்டாயமாக அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாக கூறினார்.

என் மனைவி எங்கேயும் வரமாட்டாங்க நான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். அவனவன் யார் யாரையோ கூட்டிட்டு போறான். அட நீ வாமா என அழைத்து வந்தேன். நான் யாரையும் குறை சொல்ல வரல, என மன்சூர் அலிகான் அதில் தெரிவித்துள்ளார். அவர் த்ரிஷா மற்றும் விஜயைத் தான் இப்படி தாக்கி பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Mansoor Ali khan kondu serupala adikuraru Vijay ya 😂😂😂
— Red Dragon™🐉🔥 (@ajithianforevr) March 8, 2026
pic.twitter.com/P8XGnPKfJ5

