நடிகர் விஜய் தனது கட்சியின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின் போது சங்கீதா விவகாரத்தை குறித்து பேசி இருந்தார். அதில், நீங்கள் போராட வேண்டாம், நீங்கள் வருந்தாதீர்கள். நீங்கள் வருந்துவதை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதெல்லாம், நான் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு வொர்த் இல்லை என்று பேசி இருந்தார்.

இது குறித்து, நடிகை சனம் செட்டி தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆதங்கத்துடன் பதிவிட்டு இருந்தார். இவரது, பதிவிற்கு விஜய் ரசிகர்களும் மோசமாக கமெண்ட்களை பதிவிட்டு வருவது தொடர்பாக சனம் செட்டி தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
Ennathu??
— Sanam Shetty (@ungalsanam) March 7, 2026
Worth ey illiya ???
And the ladies who are cheering for this …..
No comments! No hope!
அதில், என்னது வொர்க் இல்லையா? இதுக்காகவா இந்த பெண்கள் ஆரவாரம் செய்கிறார்கள். நோ கமெண்ட்ஸ், நம்பிக்கையே போச்சு என்று சனம் ஷெட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் உங்களைப் போன்ற துரோகிகள் எங்களுக்கு தேவை இல்லை மேடம்.

தளபதிக்கு விசுவாசமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்று பதிவிட்டார். அதற்கு சனம் ஷெட்டி தரப்பில், முதலில் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள். உங்கள் தலைவர் தவறாக இருக்கும் போது தைரியமாக கேள்வி கேளுங்கள். ஒரு உண்மை உள்ள தொண்டன் செய்ய வேண்டியது இதுதான். அது துரோகம் அல்ல. இது தான் உண்மையான ஆதரவு, வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று அவரும் பதிலுக்கு பதிவிட்டிருந்தார்.

மற்றொரு இணையவாசி விஜயை எதிர்த்து கமெண்ட் செய்து வருகிறீர்கள். உங்களை போட்டுப் பொளந்து கட்டப்போரார்கள் என்று பதிவிட அதற்கு சனம் செட்டி ஆமாம், அதெல்லாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டீர்கள்.
முன்பு உண்மையை பேசியதற்காக என்னை பாராட்டிய அதே நபர்கள் தான், இப்பொழுது உண்மையான கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை என்று பதிவிட மேலும், ஒருவர் விஜய் சங்கீதா பெயரை குறிப்பிட்டு அவர் கூறவில்லையே, என்று குறிப்பிட எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.

வீடியோ ரொம்ப தெளிவாக இருக்கு அவர் சொன்னது இந்த பிரச்சனைக்கு வொர்த் இல்லை என்று தானே அப்போ அது என்ன பிரச்சனை? இது யாரைப் பற்றி நான் தமிழக வெற்றி கழகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் சொன்ன சரியான விஷயங்கள் முதல் நாளிலிருந்து சரியான காரணத்திற்காக நான் வலுவாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளேன். இன்றைக்கு அவர் தவறு செய்கிறார் நான் கேள்வி கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

