விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார்.
ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் மொத்தத்தில் அரசியலில் விஜய்க்கு கெட்ட பெயரை உண்டாகும் விதத்தில் இப்படி செய்திகள் பரபரப்பபடுகிறது என ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

இந்த சூழலில், விஜயுடன் இப்போது இருப்பவர்கள் பற்றி விஜய் மக்கள் இயக்கம் இருந்தபோது சந்திரசேகர் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், ஒரு காலகட்டம் வரும்போது அனைத்தையும் தாங்கி தானே ஆக வேண்டும்.
இரண்டு, மூன்று தடவைகள் சொல்லி பார்த்துட்டேன். அவருக்கு சுத்தமா புரியவில்லை. விஜய்க்கு வெளியே நடப்பதை தெரியாது. அவரை இரும்பு கேட்டுக்குள் கொண்டு சென்று வைத்துள்ளார்கள். தன்னுடைய பிள்ளை அந்த விஷ வலையிலிருந்து வெளியே வரவேண்டும்.

அவ்வளவுதான் எனக்கு, ஒரு அப்பாவுக்கு பிள்ளை மீது அக்கறை இருக்கக் கூடாதா மகன் இதில் மாட்டிக்கிறானே எப்படியாவது அவர் அதிலிருந்து வெளியே வந்துக வேண்டும் என்ற அந்த ஆதங்கம் இருக்கிறது. அவருக்கு நல்லது செய்வது மாதிரியே நடித்துக் கொண்டு கெட்டது செய்கிறார்கள். இந்த இயக்கம் பெரிதாக வளரும் போது அதனால் எவ்வளவு பாதிப்பு வரும் என்று எஸ்ஏசி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

