கைக்குத்தல் அரிசி, வெள்ளை அரிசி மற்றும் கருப்பு அரிசி பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க இவை அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மக்களிடையே பிரபலமானவையாக உள்ளன. ஆனால், சிவப்பு கவுனி அரிசி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த அரிசி சமீபத்தில் கண்டறியப்பட்டதல்ல பழங்காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி.
Table of Contents
ஆனால், நமக்கு தான் இந்த அரிசியோட நன்மைகளை தெரிவது இல்லை. கருப்பு கவுனி அரிசியை போலவே சிவப்பு கவுனி அரிசியிலும் நம்ப முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கிறது. இதில், உள்ள அந்நோசையனின் கூறுதான் இந்த அரிசிக்கு கண்கவர் சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

மேலும், மற்ற வகை அரிசியுடன் ஒப்பிடும் போது இந்த வகை அரிசி அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. பெரும்பாலான மக்களிடையே, ஆரோக்கியத்தின் மீதான அக்கறை சமீப காலமாக அதிகரித்துள்ளதால், பலர் சிவப்பு கவுனி அரிசியை தேர்வு செய்கின்றனர்.
ஏனெனில், இதில் எண்ணில் அடங்கா ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. இப்போது, வெள்ளை அரிசிக்கு பதிலாக பலர் சிவப்பு கவுனி அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்ன என்பதை பற்றி இங்கே காண்போம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

சிவப்பு கவுனி அரிசியில் இன்சுலின் அளவு சீராக உள்ளதால், இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதில் மேலும் பல இயற்கை உட்பொருட்கள் இருக்கிறது. இதனால், இது ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே, இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதாக அமைகிறது.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்

சிவப்பு கவுனி அரிசியில் மிகச்சிறந்த நன்மைகளில் ஒன்று ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது. இது நுரையீரல் செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில், இந்த அரிசியில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. அதோடு, இந்த அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்ஸிஜன் சற்று மேம்பட்டு ஆஸ்துமா பிரச்சனையை தடுக்கிறது.
உடலில் ஆக்ஸிஜன் மேம்பட

சிவப்பு கவுனி அரிசியில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், தினமும் சிவப்பு கவுனி அரிசியை சாப்பிட அது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் உயிரணுக்களுக்கும் புழக்கத்தில் விட இது உதவுகிறது. இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டு மனநிலை சிறப்பாக மாறுகிறது. நீங்கள் மிகவும் ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால் சிவப்பு கவுனி அரிசியை பயன்படுத்துங்கள்.
செரிமானத்திற்கு உதவுகிறது

சிவப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது பல்வேறு செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதில், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. சிவப்பு கவுனி அரிசியில் உடலில் இருந்து நச்சுக்கள் உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் மற்றும் குடல் இயக்கம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இது ஒரு இயற்கை மலம் இலக்கியாக செயல்படக் கூடியது.
இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது

முழு தானியங்களில் உள்ள சத்துக்கள் உள்ளது. இது உடலில், உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கும். சிவப்பு அரிசியின், தவிடு கொழுப்புகளை குறைக்கிறது. இதய நோய்களை தடுக்கிறது. எனவே, உங்களுக்கு இதய நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால் சிவப்பு கவுனி அரிசியை தினமும் சமைத்து சாப்பிடுங்கள்.
உடல் எடையை கட்டுப்பாடு

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிவப்பு கவுனி அரிசி சிறப்பானதாக அமைகிறது. ஏனெனில், இந்த அரிசியில் மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது மிகவும் ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. சிவப்பு கவுனி அரிசியில் உள்ள தவிடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பும் சக்தி படைத்தது.
எலும்புகளுக்கு நல்லது

எலும்புகளுக்கு நல்லது சிவப்பு கவுனி அரிசியில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரிகிறது. மேலும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. இந்த மக்னீசியத்தின் அளவு குறையும் போது தான் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. ஆனால், தினமும் சிவப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால், முதுமை காலத்தில் சந்திக்கும் மூட்டு வலி பிரச்சனைகளை கூட தவிர்க்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

