சினிமாவில் கிளாமர் பாடல்களுக்கு என்றுமே வரவேற்பு இருந்து தான் வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டுகளில் புஷ்பா படத்தில் கூட இரண்டு பாடல்கள் கிளாமர் பாடல்களாக இருந்தது. இந்த கிளாமர் பாடல்களுக்கு படத்தில் நடிக்கும் நடிகைகளும் ஆடுவார்கள்.
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் அடையாளமாக மாறிப்போன நடிகைகளும் உள்ளனர். அந்த வகையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் சமந்தா, ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவும் ஆடியுள்ளனர்.

இந்நிலையில், தான் பாடிய ஒரு கிளாமர் பாடலுக்காக வருத்தப்படுவதாக பாடகி ஸ்ரேயா கோஷல் வெளிப்படையாக பேசியுள்ளார். பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் முன்னணி பாடகியாக இருப்பவர். அவரது, குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நாடு முழுவதும் இருக்கிறது.
அவரது, மெலோடியான பாடல்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவார்கள். அதே நேரத்தில், அவரது மற்ற பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடிக்கின்றன. அப்படி, ஒரு பாடல் தான் Chikni Chameli. கேத்ரினா கைஃப் மிக கவர்ச்சியாக அந்த பாடலுக்கு நடனம் ஆடுயுள்ளார்.

இந்நிரைலயில், ஸ்ரேயா கோஷல் கவர்ச்சி பாடல் மற்றும் கில்மா பாடல்களை பாடமாட்டேன் என சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். அப்படி பேசியதற்கு அதிகம் ட்ரோல்கள் வந்திருக்கிறது.
அதற்கு விளக்கம் கொடுத்த அவர், அப்படி ஒரு பாடலை பாடியதற்காக அவமானமாக கருதவில்லை. ஆனால், இனிமேல் அப்படி ஒரு பாடலை பாட மாட்டேன் என்றுதான் கூறினேன். ஒரு பாடல் ஹிட் ஆனதும், அந்த பாடலை கச்சேரிகளில் மேடைகளில் பாட வேண்டி இருக்கிறது.

குழந்தைகள் முன்பு இப்படிப்பட்ட வரிகள் உடன் பாடல்களைப் பாட சங்கடம் ஏற்படுகிறது. இந்த பாடலை பாடிய நேரத்தில், நான் என்ன பாடுகிறேன் என எனக்கே புரியவில்லை. அந்த நேரத்தில், நான் அதிகம் மெச்சூராக இல்லை என ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

