தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் அரசியல் மட்டுமல்லாமல், உணர்ச்சி பூர்வ தருணங்களாலும் கவனம் பெற்றது.
கட்சித் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வரும் நிலையில், தஞ்சை பகுதி ரசிகர்கள் எடுத்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விஜய் மற்றும் அவரது மனைவி Sangeetha Sornalingam இடையிலான விவாகரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக கூறப்படும் சூழலில், இன்றைய கூட்டத்தில் சில ரசிகர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்துடன் பங்கேற்றனர்.

அந்த போஸ்டர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பெரும் பேசுபொருளாக மாறியது. தலைவரின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் தீர்ந்து, இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடனும் ஆதங்கத்துடனும் ரசிகர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துக்கான புகைப்படங்கள் தற்போது எக்ஸ் (X) மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

