நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.
இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக இன்று தஞ்சாவூரில் மக்களை சந்தித்து விஜய் பேசிய நிலையில், அந்த கூட்டத்திற்கு பெண்கள் கூட்டம் குறைந்து காணப்படும் என மற்ற கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், இந்த முறையும் பெண்கள் கூட்டம் அணி அணியாக திரண்டு வந்து விஜய்க்கு ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில், விஜய்க்கு எதிராக எவ்வளவு சதி செய்தாலும் பெண்கள் சப்போர்ட் அவருக்கு தான் என தஞ்சையில் பெண்கள் அளித்த பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னணியில், சில பெண்கள் விஜய் மற்றும் திரிஷாவின் பெட்ரூமுக்குள் விளக்கு வைத்து பார்த்தீர்களா? என செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும் பேசிய நிலையில் அதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், அறிவுக்கொழுந்துகளே… விவாகரத்து வழக்கு தொடுத்தே சுறாவின் மனைவிதான். அதில் உங்கள் தலைவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார். அவரே அமைதியாக மிக்சர் சாப்பிடுகிறார். நீங்கள் ஏன் உளறுகிறீர்கள்? என ப்ளூ சட்டை மாறன் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
அறிவுக்கொழுந்துகளே… விவாகரத்து வழக்கு தொடுத்தே சுறாவின் மனைவிதான். அதில் உங்கள் தலைவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 4, 2026
அவரே அமைதியாக மிக்சர் சாப்பிடுகிறார். நீங்கள் ஏன் உளறுகிறீர்கள்? pic.twitter.com/jqiuXbK6z1

