சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நடிகர் யோகி பாபு.
யோகி படத்தின் மூலம் பிரபலமான பாபு, தனது பெயருக்கு முன்னாள் யோகியை சேர்த்து யோகி பாபு என அழைக்கப்பட்டு வருகிறார்.
ஒரு வருடத்தில் 10 முதல் 15 படங்களில் நடித்து வரும் பிஸியான நகைச்சுவை நடிகர் இவர். ரஜினி, கமல், விஜய், அஜித், விஷால், ரவி மோகன், எஸ்கே என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது 7 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.

அவர் சத்திய சோதனை என்ற படத்தையும் இயக்கி இருந்தார். கடைசியாக கெணத்த காணோம் என்ற படத்தை யோகி பாபுவை ஹீரோவாக வைத்து இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையல், கெணத்த காணோம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இதில் பங்குபெற்ற யோகி பாபு, மறைந்த இயக்குநர் சுரேஷ் வெங்கையா மகளின் கல்வி செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.
மேடையில் அவர் செய்த செயலை கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர். மறைந்த இயக்குநர் குடும்பத்துக்கு உதவி செய்ய ஒரு மனசு வேணும் என ரசிகர்கள் யோகி பாபுவை புகழ்ந்து வருகின்றனர்

