கோலிவுட் ரசிகர்களின் உதாரண தம்பதிகளாக இருந்தவர்கள் அஜித் -ஷாலினி, சூர்யா -ஜோதிகா, இவர்களை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அதே இடத்தில் விஜயும் சங்கீதாவும் இருந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும்படி சங்கீதா மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அதாவது, சில நாட்களுக்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு தொடர்பாக பலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்ததும், யார்? அந்த நடிகை என்று தேட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சிலரோ ஒரு நடிகையை குறிப்பிட்டு அவர்தான் சங்கீதா குறிப்பிடும் நடிகை என அடித்து சொல்லி வருகிறார்கள். மேலும், தங்களுடைய தலைவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கலாமா? என்றெல்லாம் சங்கீதா குறித்தும் புலம்பி வருகிறார்கள்.
பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை குறைந்து விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அந்த அச்சத்தால், ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக தற்போது, சங்கீதாவையே தரகுறைவாக பேசி வருகிறார்கள். மேலும், சங்கீதாவை இப்படி தளபதி ரசிகர்களே தரை குறைவாக பேசுவார்கள் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் விஜயோ தற்போது அமைதியான நிலைக்கு சென்று விட்டார். ஆனால், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, நாங்குநேரி கொலைக்கு கண்டனம் தெரிவிப்பது பொது விஷயங்கள் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிடுவதை அவர் மறக்கவில்லை.
இதுதொடர்பாக, அவர் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றன. இந்நிலையில், நாளை தஞ்சாவூரில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருக்கிறார்.

எப்போதும், இல்லாத அளவுக்கு இந்த கூட்டம் சங்கீதா பிரச்சனை காரணமாக மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில், சங்கீதா விஷயம் தொடர்பாக விஜய் மௌனம் கலைப்பாரா? இல்லை பொது பிரச்சினைகளை மட்டும் பேசுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், நாளைக்கு அவர் அமைதியாக இதை கடந்து விட்டு சென்று விடக்கூடாது இது தொடர்பாக குட்டி ஸ்டோரியாவது சொல்லி சோசியல் மீடியாவை ஆஃப் செய்ய வேண்டும் என பலரும் நினைத்து வருகிறார்கள். குறிப்பாக டேமேஜ் ஆன தனது இமேஜை நாளைய கூட்டத்தில் விஜய் எப்படி மீட்டெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

