Close Menu
    What's Hot

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»வாயை திறங்க விஜய்… சங்கீதாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜனநாயக மாதர் சங்கம்!
    தமிழ்நாடு

    வாயை திறங்க விஜய்… சங்கீதாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜனநாயக மாதர் சங்கம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Open your mouth Vijay… Democratic Women's Association comes out in support of Sangeetha Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியலுக்கு நுழைந்துள்ள இந்த நேரத்தில் விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுவும் சங்கீதா சொன்ன காரணங்கள்தான் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் திட்டி, ஆபாசமாக பேசி நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். தவெக தொண்டர்கள் சிலரும் இதில், சங்கீதா குறித்து விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான், சங்கீதா குறித்து அவதூறு பரப்பும் தவெக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய விஜய்க்கு அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அனைத்திந்திய தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.

    அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

    AIDWA Condemns Vijay

    ஆனால், விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக் கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து,ஆபாசமான,இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

    இது கருத்துச் சுதந்திரமல்ல – பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை – பொது சொத்து அல்ல ஒரு பெண், தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப் பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. விவாகரத்து என்பது, அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து, பெண்களை இழிவுபடுத்தும் போக்கு, ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

    திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொது வாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். இந்த நிலையில், விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதை கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மௌனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

    Open your mouth Vijay… Democratic Women's Association comes out in support of Sangeetha Vijay

    எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் – சமூக பொறுப்பு. இத்தகைய வலைதள வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.

    சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

    பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல்–பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

    பெண்களின் மரியாதை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும், ரசிக மன நிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

    சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரச்சாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    Actor Vijay AIDWA TVK TVK Vijay தவெக தலைவர் விஜய் தவெக தொண்டர்கள் மாதர் சங்கம் கண்டனம் விவாகரத்து விஜய் விஜய் சங்கீதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல… காமெடியன்.. பயன்படாத ஆணி.. அன்புமணி காட்டம்!

    March 30, 2026

    கொளத்தூரில் தவெக தலைவர் விஜய்.. டுவிஸ்ட் வைத்த தலைமை அறிவிப்பு!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும்…

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.