நமது அன்றாட வாழ்வில் உப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. நாக்கினால் உணரப்படும் உப்பின் சுவை மற்ற சுவைகளை விட நமக்கு சந்தோசத்தை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உணவின் ருசியை உப்பு அதிகரிக்கிறது. குறைந்த அளவு உப்பை சாப்பிட்டு பழகினால் நாவில் உள்ள நுண் நரம்புகள் அதற்கேற்றார் போல் மாற்றிக் கொள்கின்றன. எனவே, குறைந்த அளவில் உப்பு இருந்த போதிலும், சுவையாக உணர முடிகிறது.
உப்பு அதிகரிப்பதன் விளைவுகள்

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகமாவதால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு, போன்றவை ஏற்படலாம். ரத்தநாளத்தில் உள்சுவரில் கொழுப்பு படிவதால் உள்சுவரின் செயல் திறன் குறைகிறது.
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது உப்பு கூடுதலாக தீய விளைவை தருகிறது. பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

ரத்த அழுத்தமும் குறையும். உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வாய்ப்புண், இருதய சுவரில் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல்நோய் ஏற்படுகிறது.
ரத்தத்திலும் உப்பு சத்து அதிகரிக்கிறது. எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. சில நோய்கள் தாக்கும் போது உப்பு சத்து அதிகரிப்பால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.
மேலும், ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் யூரியா அமில சத்துக்களும் அதிகரிக்கிறது. உணவுக்கு தேவையான உப்பு நமக்கு தேவையான சோடியத்தின் அளவு ஒரு நாளைக்கு 2.3 கிராம் ஆகும். இது ஒரு தேக்கரண்டி அளவாகும்.

இந்த அளவிற்கு மேல் உப்பு எடுக்கும் பொழுது பாதிப்பு ஏற்படும். பதப்படுத்திய வேகவைத்த உணவுகள், சூப், ஊறுகாய்கள், கருவாடு, மாமிச உணவு, அப்பளம், வடகம், சோடா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உப்புச்சத்து அதிகம் இருக்கும்.
பல வீடுகளில் சாதம் சமைக்கும் போது உப்பு சேர்க்கின்றனர். அது தவறான ஒரு செயல். சாம்பாரில் பாதி அளவு உப்பு போட்டால் போதும் சமைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டும் என்றால் சோடியம் குறைவாக கலந்த உப்பை சேர்க்கலாம்.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, எலுமிச்சை பழங்கள், உணவில் சேர்க்கலாம். பழம் மற்றும் காய்கறிகளில் உப்பு அளவு குறைவாக இருப்பதால் அவற்றை தயக்கமின்றி நாம் உண்ணலாம்.
பதப்படுத்திய உணவு குளிரூட்டிய உணவை தவிர்ப்பது நல்லது. இவற்றை சாப்பிடும் போது உப்பு அளவை பார்த்து வாங்க வேண்டும். சாப்பிடுவதாக இருந்தால் உப்பு அளவை பார்த்து வாங்க வேண்டும்.
சுத்திகரித்த குடிநீரில் கால்சியத்தை எடுத்துவிட்டு சோடியம் கலக்குகின்றனர். இதனால், தண்ணீர் குடிக்கும் பொழுது நமது உடலில் மறைமுகமாக உப்பு சேர்க்கிறது.

பண், ரொட்டி தயாரிப்பில் சோடியம் பை கார்பனேட் செய்கிறார்கள். எனவே இவற்றை வாங்கும்போது அதில் எவ்வளவு சோடியம் இருக்கிறது என தெரிந்து கொள்வது நல்லது.
உப்பு சேர்க்கப்படாத ரொட்டி பிஸ்கட் நல்லது. கோதுமை, அரிசி உணவில் உப்பு இல்லை. உருளைக்கிழங்கு, பாஸ்தாவில் உப்பு இருக்காது. குறைந்த அளவு உப்பு உள்ள உணவுகள் பீன்ஸ், பால், ஐஸ்கிரீம் ஆகும்.

இதில், உப்பு கலக்காதவை தயிர், மோர், நெய், ஆலிவ் ஆயில், கான் ஆயில், இனிப்பு வகைகளில் தேன், ஜாம், ஜெல்லி, காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகும்.
தக்காளி ஜூஸ் மற்றும் பழ ரசத்தில் உப்பு குறைவாக இருக்கும். இதனால், ரத்தநாளத்தில் உறையும் தன்மை கூடுகிறது. ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இதேபோன்று, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதமும் வரலாம்.
சில நேரம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா ஏற்படலாம். முக்கியமாக மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது. சிறுநீரகம் இதன் செயல்திறன் வயது அதிகரிக்க அதிகரிக்க குறையும்.
80 வயதில், சிறுநீரக செயல்பாடு 30 வயது சிறுநீரக செயல்பாட்டை விட குறைவாகத்தான் இருக்கும். இச்சூழலில், அதிகமான உப்பு எடுக்கும்போது அவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டிவிட்டு உடம்பில் சிறுநீரகங்கள் நீர் வெளியேற்றும் தன்மையை குறைக்கிறது.

இதனால், கால், உடல் வீக்கம் ஏற்படும். ரத்த நாளத்தில் விரியும் தன்மையை அதிக உப்பு குறைக்கும். உதாரணமாக சிறுநீரகத்தில் எந்த உறுப்புகளை எடுத்தாலும், சற்று அதிகமாக வேலை செய்யும்போது அதற்கு சராசரியை விட அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

