மாலை வேளையில் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று பல யோசனை தாய்மார்களுக்கு இருக்கும். அந்த வகையில், மிகவும் சுலபமாகவும் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். எப்போதும், பஜ்ஜி செய்வதாக இருந்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆகியவற்றை தான் பயன்படுத்தி செய்வோம்.
ஆனால், வேறு காய்கறிகளை கொண்டும் பஜ்ஜி செய்யலாம். அந்த வகையில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீர்க்கங்காய் இருந்தால் இதனை ஒரு முறை செய்து பாருங்கள்.
இந்த பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும் மேலும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதுவும் கடையில் விற்கப்படும் பஜ்ஜி மாவிற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு சில பொருட்களைக் கொண்டு பஜ்ஜி மாவை தயாரித்து செய்யும் போது பஜ்ஜியின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பீர்க்கங்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
- ஒரு கப் கடலை மாவு
- ரெண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
- ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
- கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- ஒரு கரண்டி இட்லி மாவு
- சுவைக்கேற்ப உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- கால் டீஸ்பூன் நெய்
- ஒரு சிட்டிகை ஆப்ப சோடா
- ஒரு பீர்க்கங்காய்
- பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை

Step 1:முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சத்தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்து அதனுடன் சுவைக்கு ஏற்ப உப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
Step 2:பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கைகளால் நன்கு கட்டிகள் இன்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
Step 3:பிறகு அதில் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி, அத்துடன் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
Step 4:அதன் பின்னர், பீர்க்கங்காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு மெல்லிய வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
Step 5:அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை வைத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
Step 6: எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு பீர்க்கங்காய் துண்டுகளையும் எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுத்தால் சுவையான மற்றும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.

