தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார். இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம். அவரது மகன் ஜோசப் சஞ்சய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஜேசன் சஞ்சய் தனது தந்தையை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ரசிகர்களிடையே பரவிய நிலையில், சில சமூக வலைதள பயணங்கள் ஜேசன் சஞ்சய் ஏற்கனவே விஜயின் கணக்கை பின்தொடர்ந்து இருக்க மாட்டார் என்று வாதிடுகின்றனர். இது இந்த விவகாரத்தில் தெளிவின்மையை ஏற்படுத்துகிறது.

