ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

“விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின் படி திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர். திருமணத்தின் முதல் பகுதி காலையில் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

மேலும், மாலை 4 மணிக்கு மேல் ராஷ்மிகாவின் பூர்வீகமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை பிரதிபலிக்கும் கொடவா பாரம்பரிய படி திருமணம் மீண்டும் நடைபெற்றது. மேலும், கோலாகலமாக நடந்து முடிந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் காதல் திருமணம் செய்து கொண்ட போட்டோஸ் இணையதளத்தில் வெளியாகி செம வைரலானது.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணத்தில் அணிந்திருந்த உடை மற்றும் தங்க நகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நகைகள் குறித்த மதிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு 5 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இரண்டு முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட இந்த தங்க நகைகளை தயாரிக்க பத்து மாதங்களுக்கு மேல் ஆனதாகவும், இதை ஹைதராபாத்தை சேர்ந்த நகை வடிவமைப்பாளரால் தனிப்பட்ட முறையில் தயாரித்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

