சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி இயல்பாக உருவான உறுதியான கூட்டணியாகும். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தி.மு.க.வுடனேயே மட்டுமே நடைபெற்றுள்ளது; வேறு எந்தக் கட்சியுடனும் ஆலோசனை நடத்தப்படவில்லை. மேலும், காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தி.மு.க.வுடன் நடைபெற்ற முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாகவும், கூட்டணி தொடர்பான கலந்துரையாடல்கள் நல்ல முன்னேற்றத்துடன் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

