நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலில் நுழைந்துள்ளார். தவெகவை ஆரம்பித்து 2 வருடங்கள் முடிந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்காக மெனக்கெட்டு பணியாற்றி வரும் சூழலில், விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யை விவாகரத்து செய்ய வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார் அவரது மனைவி.
இது சினிமா வட்டாரத்தை விட அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. விஜய் – சங்கீதா சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், எல்லா நிகழ்ச்சியிலும் சங்கீதா இல்லாமல் தனியாக விஜய் பங்கேற்றிருந்தார்.
எது உண்மை என தெரியாமல் இருந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து மனு அது ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவாகரத்து பஞ்சாயத்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனு அளித்துள்ள நிலையில், அந்த மனுவில் கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் தரப்பில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மனுவில், விஜய்க்கு திருமணத்தை மீறி நடிகையுடன் உறவு இருந்ததாகவும், அதுவும் 2021ஆம் ஆண்டில் இருந்தே அந்த நடிகை விஜய்யின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
Which actress?? pic.twitter.com/t0bNInPBlm
— Trollywood 𝕏 (@TrollywoodX) February 27, 2026
மேலும் விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தால் நிச்சயமாக அந்த நடிகை பெயர் சொல்லப்படும் என அந்த மனுவில் சங்கீதா கூறியுள்ளார்.
இதனிடையே நெட்டிசன்கள் அந்த நடிகை யார் என ஊர் உலகத்துக்கே தெரியும் என விஜய்க்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.
விஜய் அரசியலில் நுழைந்த நிலையில், அவருக்கான ஆதரவு அலை அதிகமாக உள்ளதாக கணிப்பு வெளியாகின. அதுமட்டுமல்லாமல் பெண்கள் ஓட்டு விஜய்க்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்களும் வெளியாகியிருந்தன.
இறுதியாக பிரம்மா அஸ்த்திரம் ஏவப்பட்டது🥲
— Ashwin TVK (@ashwin_tvk_) February 27, 2026
Leaving upto him, personal issues!
Stay Strong Anna @TVKVijayHQ 🫂❤️ pic.twitter.com/qN0Cjd1mGb
இந்த நிலையில் விஜய்க்கு எதிராக இந்த விவாகரத்து வழக்கு பார்க்கப்படுகிறது. மேலும் இது திமுகவுக்கு ஆதரவாக வந்த பிரம்மாஸ்திரம் என அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி பெண்கள் ஓட்டு விஜய்க்கு விழுகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

