2005-ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக பணியை தொடங்கிய ஆர்.ஜே பாலாஜி மீடியாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது, இவர் சூர்யாவை வைத்து கருப்பு என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், சூர்யாவுடன் திரிஷா பல வருடத்திற்கு பின் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் கல்லூரி விழாவில் பேசிய பாலாஜி தனக்கு இருந்த கெட்ட பழக்கத்தில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார்.
அதில், நான் கல்லூரியில் படிக்கும் போது சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டேன். அந்த பழக்கத்தை விடுவதற்கு எனக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆனது.

அந்த பழக்கத்தால் என்னுடைய தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், சில நாட்கள் பேச முடியவில்லை. என்னுடைய தொழிலே ரேடியோவில் பேசுவது தான் அதை என்னால் செய்ய முடியாமல் போனதால், அந்த பயத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

அதன் பிறகு எந்த கெட்ட பழக்கத்திற்கும் நான் அடிமையாக விடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்போது, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு 12 இல் இருந்து 13 மணி நேரம் உற்சாகமாக வேலை செய்கிறேன். இதனால், இன்றைய மாணவர்களுக்கு நான் சொல்லும் ஒரே விஷயம் உங்களுடைய உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினர்.

