ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். அவர்களின் விவாகரத்து பிரிவுக்கு பலரும் பல காரணங்களை சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்கள் எதுவும் ரியாக்ட் செய்யாமல் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில்,நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தை தொடர்ந்து, புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். அந்த இரண்டு திரைப்படங்களும் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தன.
அந்த படங்களை தொடர்ந்து பெரிய திரையில் தன்னுடைய தந்தை ரஜினிகாந்த்தை வைத்து ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைப் பெறவில்லை. பாசிடிவ் விமர்சனங்களை விட நெகடிவ் விமர்சனங்களே இந்த படத்திற்கு அதிகப்படியாக கிடைத்தது என்று சொல்லலாம்.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது, புதிய திரைப்பட ஒன்றை இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார் என்றும், இதில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்ற உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

