ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா? இந்த கொண்டைக்கடலை சட்னியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள்
- அரை கப் ஊற வைத்த கொண்டைக்கடலை
- அரை கப் தேங்காய் துருவல்
- இரண்டிலிருந்து மூன்று பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி
- ஒரு நெல்லிக்காய் அளவு புளி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் அரைப்பதற்கு
செய்முறை
Step 1:ஊறவைத்த கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
Step 2:ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த கொண்டைக்கடலையை தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, புளி மற்றும் உப்பு சேர்த்து சிதறு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
Step 3:சுவையான சத்தான கொண்டைக்கடலை சட்னி தயார்.

