பொதுவாக பெண்கள் தங்களுடைய கண்களுக்கு மை இடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கண்களுக்கு காஜல் திட்டாமல் நம்மில் பலருக்கும் அந்த நாளே முழுமை அடையாது.
கண்ணுக்கு மை அழகு என்று சொல்வார்கள். ஆனால், அந்த அழகு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். கண்களுக்கு மை போடும் பழக்கம் நம்மில் பலருக்கும் தினசரி வேலையாகவே மாறிவிட்டது. ஆனால், நாம் பயன்படுத்தும் அந்த காஜல் பென்சிலோ அல்லது கண்களுக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்பது அதிர்ச்சிகரமான விஷயமே.
ஒரு சிறிய அலட்சியம் அல்லது மேக்கப் சாதனங்களை சரியாக பராமரிக்காதது நம் கண்களை கூட பாதிக்கக்கூடும் என்று பலருக்கும் தெரிவதில்லை. வணிக ரீதியாக தயாரிக்கப்படும் பெரும்பாலான காஜல் அதிக அளவு ஈயத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

NIH ஆய்வு நாம் பயன்படுத்தும் காஜல் பென்சில்கள் அல்லது ஐலைனர் பழையதாகி விட்டால் அதில் உள்ள பிரசர்வேட்டிவ்ஸ் வீரியத்தை இழக்கின்றன. இதனால், அதில் பாக்டீரியா மற்றும் பூச்சிகள் வளரத் தொடங்கி இவற்றை மீண்டும் மீண்டும் கண்களில் பயன்படுத்தும் போது கிருமிகள் நேரடியாக கண்ணுக்குள் செல்கின்றன.
குறிப்பாக கண்களின் உட்புறவிழும்பில் காஜல் தடவும் போது, அந்த துகள்கள் கண்ணீருடன் கலந்து கண்ணின் மேற்பரப்பை பாதிக்கிறது என்பது நம்மில் பலரும் அறியாத விஷயமே. இது கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். சுரப்பிகளை அடைத்து எரிச்சல் மற்றும் சிவப்பு நிற தழும்புகளை உருவாக்கி விடுகின்றன.

தொற்றுப் பரவுவதற்கான முக்கிய காரணங்கள் கண்களுக்கு மேக்கப் சாதனங்களால் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக காஜல் மற்றும் ஐலைனர்களை அதன் காலாவதி தேதிக்குப் பிறகும் தொடர்ந்து பயன்படுத்துவது கண்களுக்கு கிருமி தொற்றை வழிவகுக்கும்.
அதேபோல, தோழிகளுடனும் அல்லது மற்றவர்களுடன் உங்கள் மேக்கப் சாதனங்களை பகிர்ந்து கொள்வது ஒருவரிடம் இருந்து உள்ள கிருமியை மற்றவருக்கு எளிதில் பரவ கூடும். சுத்தமில்லாத ப்ரஷ் அல்லது கைகளை பயன்படுத்துவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் மேக்கப் பொருட்களை வைக்கும் போது கிருமிகள் மிக வேகமாக அதில் வளரக்கூடும். இத்தகைய அசுத்தமான பொருட்களை கண்களில் மிக அருகில் பயன்படுத்தும் போது அது கார்னியா எனப்படும் விழி வெண் படலத்தை பாதித்து தீவிரமான புண்களை கூட ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
தவறான முறையில் கண் மேக்கப் பயன்படுத்துவதால் பலவிதமான மருத்துவ பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக மெட்ராஸ் என்று அழைக்கப்படும் இது கண்கள் சிவந்து போவதற்கும் நீர் வடிவதற்கும் காரணமாக இருக்கிறது. அடுத்து, இமை விழும்புகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் கண்களின் மேற்பரப்பில் தோன்றும் வலி மிகுந்த கட்டிகள் போன்றவை இமை சுரப்பிகள் அடையப்படுவதால் ஏற்படுகின்றன.

சில நேரங்களில் மேக்கப் துகள்கள் கண்ணீரின் தன்மையை மாற்றி கண்களின் வறட்சியை உண்டாக்கும். கவனக்குறைவாக மேக்கப் போடும்போது ஏற்படும் சிறு கீறல்கள் கூட பார்வை குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன.
பராமரிக்க வேண்டிய முறைகள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில எளிய மற்றும் கட்டாயமான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். எப்போதும், தரம் சரி பார்க்கப்பட்ட நல்ல நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துவது உங்கள் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கக்கூடும்.
காஜல்களை கண்ணில் உட்புற விழும்பை தவிர்த்து இமைகளுக்கு வெளியே தடவுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேக்கப் சாதனங்களை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றி விடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

மேக்கப் போடுவதற்கு முன்பும் அதனை கலைக்கும் முன்பும் கைகளை நன்றாக சுத்தப்படுத்தி கழுவ வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்னால், கண்டிப்பாக உங்கள் மேக்கப் முழுமையாக நீக்கிவிட வேண்டும். கண்களில் சிறிதளவு எரிச்சல் அரிப்பு அல்லது சிவப்பு நிறம் தென்பட்டாலும் உடனடியாக அந்த பொருளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

