இணையதளத்தில் வைரலானால் போதும் அந்த நபர் உடனே பிரபலமாகிவிடுவர். இது இப்போதைய சினிமா காலத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி வருகிறது.
அப்படித்தான் தனது ராப் பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். கேரளாவை சேர்ந்த இவர், அடித்தட்டு மக்களுக்காக தனது பாடல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தார்.
ராப் பாடலை எழுதி யூடியூபில் பதிவிட்டு வந்த வேடனுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதன் மூலம் சினிமா வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
Happy Married Life #Vedan 💙💐 pic.twitter.com/Xy0dmhSDis
— Pragash Nandhan (@PragashNandhan) February 25, 2026
மஞ்சுமெல் பாய்ஸ் படம், தமிழில் பைசன் படத்தில் பாடியிருந்தார். அண்மையில் இவர் மீது பெண்கள் பாலியல் புகார் அளித்து, அது நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான நவமி லதாவை திருமணம் செய்து கொண்டார். எழுத்தாளரான நவமி லதாவை எளிமையான முறையில் கேளராவில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

