2018-ஆம் ஆண்டு தனது பயணத்தை அபர்ணதி தொடங்கினார். இந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் நிறைய போட்டிகளை சந்தித்ததாகவும், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பது தனக்கு சவாலாகவும், அதேசமயம் உற்சாகம் அளிப்பதாகவும் அபர்ணதி கூறியிருந்தார்.

அதே சமயத்தில், கேமராவுக்கு முன்னால் சகஜமாக பேசுவது போல் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டே போவதாக கூறினார். தனக்கு நெருங்கிய நண்பர்கள் சினிமாவில் குறைவு தான் என்றும், அதனால் பேக் நட்பு இருப்பதாக உணரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை துரோகம் செய்த சினிமா தோழி பற்றி விவரித்த அபர்ணதி அவள் நடித்த படத்தின் பிரீமியர் ஷோவுக்கு நான் போயிருந்தேன். அடுத்த நாளே, அந்த படத்தின் இயக்குனர் என் போன் நம்பர் கேட்டதாகும், ஆனால் என்னை அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டாம் என வேறொரு நடிகை அவர் பரிந்துரை செய்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

மேலும், சினிமாவில் தன்னை இதுவரை யாரும் தவறாக அணுகியதில்லை என்று திட்டவட்டமாக அபர்ணதி பேசினார். உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ வாய்ப்புகள் வந்ததாகவும் மற்றபடி எந்த கெட்ட எண்ணத்திலும் தன்னை யாரும் அணுகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து பேசிய அபர்ணதி அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டது ஒரு நல்ல அனுபவம் என்றும், ஆர்யா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அந்த நிகழ்ச்சியில் நிறைய வாக்குவாதங்கள் நடந்ததாவும், அதனால் தனக்கு மன வருத்தம் ஏற்பட்டது உண்மைதான் என்றும், ஆர்யாவுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு வேண்டவே வேண்டாம் ஆர்யா கூட நடிக்கவே மாட்டேன் என்று பதில் அளித்தார்.

அந்த நிகழ்ச்சியில், நடந்தது ஒரு நல்ல நினைவாக இருக்கட்டும். ஒரு Fake கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் நடிப்பதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை. அதை வைத்து நான் ஒரு திரைப்படத்தில் நடித்து அதன் நினைவை கெடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

