நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை மூலம் கடின உழைப்பை போட்டு பெரிய திரைக்கு வந்தார். குடும்பம், காதல், நகைச்சுவை படங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
கடந்த 2024 வருடம் எஸ்கே நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்துக்காக தனது உடலை மெருகேற்றி கடினமாக உழைத்திருந்தார். உழைப்புக்கு ஏற்ற பலன் போல தற்போது அந்த படத்தில் நடித்தற்காக எஸ்கேவுக்கு ஃபிலிம் ஃபேர் விருது அறிவிக்கப்பட்டது

முதல்முறையாக ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரிய சாமி இயக்கிய அந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்திருந்தார்.
300 கோடி ரூபாய்க்கு மேல் படம் பெரிய ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல், எஸ்கேவின் கேரியரில் முக்கிய மைல்கல் படமாக அமைந்தது. இதன் பின்னர் தான் தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் உயர்த்தினார்
அமரன் படத்துக்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை வென்ற சிவகார்த்திகேயன், விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
முன்னதாக சிவகார்த்திகேயன் என்னதான் நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும், பல ஹிப்படங்களையும் இவர் மிஸ் செய்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம் மற்ற நடிகர்கள் நடிக்க படுஹிட் ஆகி உள்ளது.

அப்படி என்னென்ன படங்களை சிவகார்த்திகேயன் மிஸ் செய்திருக்கிறார் தெரியுமா? நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று, சிம்புவின் மாநாடு, கவின் நடித்த சித்தா, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற படங்களை தான் சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளாராம்.

