சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் படம் தாய் கிழவி. இதில், இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ் என பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் ஃப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அதில், ராதிகா பேசியிருக்கும் ஒரு விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி ஆகி வருகிறது.

அதாவது, ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாக மாற்றி தன்னை நடிக்க வைத்து விட்டதாக தாய்க்கிழவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.
மேலும், பேசிய அவர் ரஜினிகாந்த் இந்த வேடம் ஏற்று நடிக்க மாட்டார். அதை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான், இந்த படத்தை பார்க்கிறேன். என்ன ஒரு மாஸ் இந்த தாய்க்கிழவி.

இந்த படத்தில் நடிக்கும் போது கால் உடைந்து விட்டது. அவ்வளவு வலியோடு நடித்தேன் ஒரு ஷூட்டிங் கூட என்னால் நின்று கூட விடாது என நடித்தேன். ஏனெனில், தயாரிப்பாளரின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும் என அவர் பேசியுள்ளார்.
அரசியல் நையாண்டி கலந்த ட்ரைலரை வெளியிட்டு, தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரும் படங்களில் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்துள்ளது இந்த தாய் கிழவி. மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

