கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தீவிரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள திறந்தவெளி பொட்டல் காட்டில் 3 பேர் கொண்ட கும்பல், தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
இந்த சம்பவத்தில், தொடர்புடைய 3 பேர் சுட்டுபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம், தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வன்கொடுமைக்கு உள்ளான கல்லூரி மாணவி, அவருடைய ஆண் நண்பர், குடும்பத்தார், விசாரணை அதிகாரிகள் உட்பட 72 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான தடயங்கல் பெருமளவில் உதவியதாக தெரிகிறது.
குற்றம் நடந்த ஒரு மாத இடைவெளியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் வழக்கின் விசாரணை நடைபெற ஆரம்பித்து, ஒரு மாதத்திற்குள் இரு தரப்பு விசாரணையும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த வழக்கில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு 10-க்கும் மேற்பட்ட கொடும் குற்றங்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

