எப்பவுமே மட்டனை ஒரே மாதிரி செஞ்சு போர் அடிக்குதா? அப்ப இந்த டிஷ் உங்களுக்கு தான். கொஞ்சம் வித்தியாசமா மட்டனை சாப்பிட நினைச்சா இந்த டிஷ் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. இந்த பக்குவத்துல மட்டன் நெய் ரோஸ்ட் செய்தால், பின் அடிக்கடி இதையே செய்ய சொல்லி கேட்பாங்க, முக்கியமா இந்த மட்டன் நெய் ரோஸ்ட் செஞ்சு சூடான சாதத்துடன் சாப்பிடும் போது டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
- அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- கால் கிலோ மட்டன்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
- உப்பு தேவைக்கேற்ப
- தண்ணீர் தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு
- ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி
- ஒரு டீஸ்பூன் மிளகு
- நாலு வரமிளகாய்
- இரண்டு காஷ்மீரி மிளகாய்
- ஒரு டீஸ்பூன் சீரகம்
ரோஸ்ட் செய்வதற்கு
- ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய்
- 20 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
- ஒரு கொத்து கருவேப்பிலை
- இரண்டு வரமிளகாய்
- தேவையான அளவு தண்ணீர்
- உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை
Step 1: முதலில் மட்டனை நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கி கழுவி வைத்துள்ள மட்டனை மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி மட்டனிலிருந்து நீர் பிரிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.
Step 2: பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி நாளிலிருந்து ஐந்து விசில் விட்டு இறக்க வேண்டும். பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மல்லி, மிளகு, வர மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
Step 3: பின்னர் வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு பின்பு சிறிது நீரை ஊற்றி அரைத்து தனியாக வைக்க வேண்டும்.
Step 4: பிறகு ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
Step 5: அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
Step 6: அடுத்து, அதில் வேக வைத்துள்ள மட்டன் நீருடன் அப்படியே சேர்த்து உப்பு தேவையான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
Step 7: தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்து நன்கு சுருள வதைக்கி இறக்கினால் சுவையான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.

