கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, 4 எம்எல்ஏ சீட்டுக்களை வென்றிருந்தது.
அப்போது முக்கியமாக பேசப்பட்டவர் நடிகை குஷ்பு. பாஜகவில் இணைந்து முதல் தேர்தலை சந்தித்ததிருந்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளரிடம் சுமார் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது
அதற்கு பதலளித்த அவர், யார் போட்டியிட போகிறார்கள் என்பது முக்கியமல்ல, எங்கு நின்றாலும் ஜெயிக்க வேண்டும் என்பதே முக்கியம் என கூறிய அவர், தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பின் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள் அதன் பிறகே நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது தெரிய வரும் என கூறினார்.
மேலும் திமுகவில் தேமுதிக இணைந்தது குறித்த கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் இல்லை, யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் என்றும், விஜயகாந்த் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறினார்.

