ஒரு குடும்பத்தால் அண்ணா உருவாக்கிய அறிவியக்கம் சூறையாடப்படுவதை நாடு பார்க்கிறது என தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாலில் படுநெய்யாய், விறகில் தீயாய் எல்லாக் குடும்பத்திலும் தவெக வியாபித்திருக்கிறது. அதனால்தான் குடும்பத்தை அரசியல் படுத்துங்கள் என்று இளவரசர் இதோபதேசம் செய்கிறார்.
அண்ணா பந்தபாசத்தோடு திமுகவை வளர்த்தார்; இவர்கள் திமுகவை வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்கள் குடும்பப்பாசத்தை மட்டும் வளர்த்தார்கள். ஒரு குடும்பத்தால் அண்ணா உருவாக்கிய அறிவியக்கம் சூறையாடப்படுவதை நாடு பார்க்கிறது; கேடு சூழ்கிறது.

இதற்கு முடிவுகட்ட முடிவிலாப் போருக்கு முகம் தந்துவிட்டார் தளபதி
விஜய். வெல்லல்போகிறார் விஜய் என்று மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்..! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

