மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் புள்ளிமான் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு என்ற பகுதியில் இருந்து உணவு தேடி வந்த புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முற்பட்டுள்ளது.
அப்பொழுது, அதி வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண்மான் துடிதுடித்து உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் அப்பகுதி பொதுமக்கள் கொண்டுள்ளனர்.

