இல்லத்தரசிகள் பார்க்காத சீரியல்களே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் சீரியல் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
இதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ், கலைஞர் டிவி என ஏராளமான தொலைக்காட்சிகளில் சீரியல் ஒளிபரப்பானாலும் விஜய் டிவிக்கு என்று தனி இடம் உண்டு.
ஒரு காலத்தில் ரியாலிட்டி ஷோக்களில் கொடி கட்டி பறந்த விஜய் டிவி, தற்போது சீரியல்களிலும் கோலோச்சி வருகிறது. பல டப்பிங் சீரியல்களையும் ஒளிபரப்பி மக்கள் மனதில் பதிய வைத்தனர்.
அப்படி கடந்த ஆக்ஸ்ட் மாதம் ஒளிபரப்பான தொடர்தான் மகளே என் மருமகளே. இந்த சீரியல் தெலுங்கில் ஹிட் ஆன மகுவா ஓ மகுவா என்ற சீரியலின் ரீமேக்தான்.

.இந்த சீரியல் சிலருக்கு வந்ததும் தெரியல.. போகிறதும் தெரியல என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது. இது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

