Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!
    கோவை

    இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் தொடர்பாக, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பின் புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தெரியவந்தது.

    இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில், உயிரிழந்த பெண் செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அனிதா (25) என்பதும், இவர் அங்கு காய்கறிகடை நடத்தி வருவதும் ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன தமிழ்செல்வன் (30) என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, அனிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வட்டமலைபாளையம் பகுதிக்கு தமிழ்செல்வன் வந்து உள்ளார். அப்போது, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    CBE UTv

    இதில், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அங்கு இருந்த கட்டையால் அனிதாவின் தலையில் தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதை அடுத்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை மாற்றவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து சடலத்தில் ஊற்றி தீவைத்து விட்டு தமிழ்செல்வன் அங்கு இருந்து தப்பி உள்ளார்.

    இதை அடுத்து, அனிதாவின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் தமிழ்செல்வன் பிடிபட்டார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநனராக பணியாற்றி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தமிழரசனை பிடிக்க முயற்சி செய்தபோது தப்பி ஓடியதாகவும் அப்போது கீழே விழுந்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறி ஏற்பட்டதாகவும், போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து மாவு கட்டு போட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Coimbatore Murder Case Crime news Tamil Thudiyalur Police Youth Arrested Murder இளம்பெண் எரித்த வழக்கு கோவை கொலை சம்பவம் வட்டமலைபாளையம் சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.