திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா இவர் ஹீரோயினாக நடித்து பாட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக பல வருடங்கள் கோலோச்சினார். திருமணம் செய்து செட்டிலானர் மீனா.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், தனது மகள் நைனிகாவை மட்டும் தெறி படத்தில் நடிக்க வைத்தார். இதற்கிடையில், அவரது கணவர் கொரோனா காலகட்டத்தில் உடல்நல குறைவால் உயிர் இழந்தார். அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா தான் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்த போது நடந்த சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் அந்த பேட்டியில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்த அப்போது படத்தில் சூடு வைப்பது போன்ற சீன் படமாக்கப்பட்டது.

உண்மையிலேயே எனக்கு சூடு வைக்கப் போகிறார்கள் என நினைத்து சூட்டிங்கில் கத்தி கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டேன். யார் சமாதானம் செய்தாலும் கேட்கவில்லை. தொடர்ந்து, அழுது கொண்டே இருந்தேன். ரஜினி சார் கூட பதறிப் போயிட்டாரு, அப்போது, இயக்குனர் தான் என்னை தூக்கிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்து சூடெல்லாம் வைக்க மாட்டோம் என கூறினார்.

அதையடுத்து தான் நான் சமாதானமானேன். அதனை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்று மீனா தெரிவித்துள்ளார். தற்போது, சீக்ரெட் ஸ்டோரிஸ் ரோஸ்லின் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இது வரும் 27ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

