பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல் – ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர்.
இருபெரும் துருவங்கள் இணைந்து நடிப்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, நெல்சன் இயக்க உள்ளார்.
அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருவதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் பிரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுவும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் பிரோமோ வெளியானது.
ரஜினி, கமல், நெல்சன், அனிருத் இருக்கும் பிரேமோ வீடியோ வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது. யாருதான் ஹீரோ என்ற கமல் பேச்சுடன் அந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது.

