தேவையான பொருட்கள்
- வேக வைக்க பாசிப்பருப்பு கால் கப்
- தண்ணீர் ஒரு கப்
- வெள்ளரிக்காய் 150 கிராம் நறுக்கியது
- மஞ்சத்தூள் கால் டீஸ்பூன்
- நல்லெண்ணெய் அரை டீஸ்பூன்
அரைக்க
- தேங்காய் கால் கப்
- சீரகம் அரை டீஸ்பூன்
- பச்சை மிளகாய் ஒன்று
- சிறிதளவு தண்ணீர்
கூட்டு செய்ய
- தண்ணீர் தேவையான அளவு
- கருவேப்பிலை இரண்டு கொத்து
- மல்லி ஒரு கைப்பிடி
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
- அரை டீஸ்பூன் இடித்த மிளகு
தாளிக்க
- கடுகு அரை டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
- இஞ்சி பொடி அரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
- பெருங்காயம் அரை டீஸ்பூன்
செய்முறை
Step 1: முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், பருப்பு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும். ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து பிரஷர் தானாக வெளியேறிவிடவும்.
Step 2: அதே சமயம் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் ஆகியவற்ற சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் வெளியேறியதும் வேகவைத்த பருப்பை நன்கு கலந்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுது, தண்ணீர், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
Step 3: மேலும் நசுக்கிய மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். கூட்டு விரும்பிய பக்குவத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிய விடவும். மேலும், பெருங்காயம் மற்றும் இஞ்சி கொடியை சேர்த்து நன்றாக கலக்கும் அவ்வளவுதான் சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

