பொதுவாக நடிகைகள் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், ஆரோக்கியத்தை மெருகூட்டவும் பல்வேறு தயாரிப்புகளை பயன்படுத்துவது முதல் அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டு அவர்களுடைய அழகை மேம்படுத்துவார்கள். ஆனால், சில நடிகைகள் இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகுக்கு அழகு சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜி தன்னுடைய சரும அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, தான் சருமத்திற்கும் தலைமுடிக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாகவும்.

அதுமட்டுமின்றி உணவிற்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாகவும். அதைவிட அழகுக்கு ஒரு சிறந்த பொருள் ஈடு இணையே கிடையாது என்றும், தான் மகாராஷ்டிரா கடலோர பகுதியில் பிறந்து வளர்ந்ததால், அங்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும், சருமத்திற்கு மிகவும் தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது என்றும், ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களும் தங்களுடைய சருமத்திற்கு ஏற்ப பொருட்களை பயன்படுத்துவார்கள்.

கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மேஜிக் பொருள் தனக்கு, அது நன்றாகவே வேலை செய்கிறது என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக லாரிக் அமிலம் நிறைந்துள்ளது.

இது சருமத்தின் தடையை வலுப்படுத்தி ஈரப்பதத்தையும் அதிகரிக்கவும், குறைக்கவும் உதவுகிறது. இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த எண்ணை ஏற்படுத்தலாம். எனவே, அவரவர் சருமத்திற்கு ஏற்ப தெரிந்து கொண்டு பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது.
பக்க விளைவுகள்

சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!
தேங்காயை அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கொண்டதாக இருப்பதால், எடை அதிகரிக்கும்.
குறிப்பாக அதிக நார்ச்சத்து அல்லது கொழுப்பு நிறைந்த உணவைப் பழக்கமில்லாதவர்களுக்கு, அதிகப்படியான உட்கொள்ளல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
தேங்காய் கொழுப்புகள் தாவர அடிப்படையிலானவை என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் சில நபர்களில் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக்கூடும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTVPrime பொறுப்பாகாது.

