விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் NDA என்றால் எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் கூட்டணி. பழனிச்சாமி அவர்களே, சாதனைக்கு மட்டுமல்ல உங்களுடைய பொய்களுக்கும் என்னால் புள்ளி விவரங்களோடு, பதில் சொல்ல முடியும் என்று தெரிவித்திருந்தார்.

பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..
மேலும் பேசுகையில், பழனிச்சாமி என்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் இவரை போயிருப்பார் என்று என்னை பற்றி பேசியிருக்கிறார். பழனிச்சாமி அவர்களே, என் மரணத்தைப் பற்றி பேசுகிறீர்களே மரணத்தை பார்த்து கலங்க வேண்டிய பயப்பட வேண்டியவன் நான் அல்ல.

த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1976 ல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே 23 வயது மீசாவில் கைது செய்யப்பட்டு சிறை கொடுமைக்கு ஆளானவன் என்று தெரிவித்தார். மேலும், ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான் என்றும், ஆட்சியர், அமைச்சர்கள் என்று யாரிடமும் சொல்லாமல் நான் கொரோனா வார்டுக்கு சென்ற காரணத்தினால் என் மனைவி துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்.

மக்களை காக்க எந்த அளவுக்கு துணிச்சலாகவும், செல்லக்கூடியவன் நான். அதற்கெல்லாம் பயந்த அரசியல் தலைவராக நான் இல்லை. என்னுடைய வருத்தம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மக்கள் திலகம் எம்ஜிஆர் என்று எத்தனையோ பண்பாடு மிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான். இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறதே என உண்மையில் வருத்தப்படுகிறேன் என்று அதில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து காட்டமாக பேசி இருந்தார்.

