தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், திருநெல்வேலியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், தற்போது திமுகவிடம் முழு அதிகாரம் இல்லை இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்காது.
இதற்கும் முட்டுக்கட்டை போட்டு நடக்க விடாமல் செய்திருப்பார்கள். தற்போது, அதிகாரம் இல்லாத முதல்வராகத் தான் முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளிய வேண்டுமானாலும் தனித்தனியாக இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான்.

இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம் தான். மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்து விடக்கூடாது என்பதை அவர்களின் நோக்கமாக இருக்கிறது. விஜய் வந்ததிலிருந்து அவர்களால், ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால், அவர்கள் மீது செம கோபத்தில் உள்ளனர். கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டார்கள். ஜனநாயகன் படத்தை முடக்க பார்த்தார்கள். அதனை யார் முடக்கியது என்று உங்களுக்கு தெரியும். ஆனால், திமுக பாஜக மற்றும் பலர் என்னை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். நிச்சயமாக தவெகவுக்கு ஆட்சி அமைக்கும். நிச்சயமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அதில் விஜய் தெரிவித்தார்.

