நடிகர் விஜயின் கடைசி படமாக உருவான ஜனநாயகன். ஹச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே என பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரம்மாண்டத்தின் உச்சமாகவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்றது.

இது அதுல.. ஷங்கரை காப்பியடித்த அட்லி?.. ‘அந்த’ படத்தோட கெட்டப் மாதிரியே இருக்கே..!
முதலில் விஜய் படங்களில் ஹிட் பாடல்களின் கச்சேரி நடந்தது. அடுத்த, ஜனநாயகன்பட இசை வெளியீட்டு விழா நடந்தது. ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில், இன்னும் பிரச்சனையை சந்தித்து வருகிறது. வழக்கமாக, வெளியூர் சென்று விட்டு விமான மூலம் சென்னை வரும் பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது வழக்கமான ஒரு நிகழ்வு அப்படி சமீபத்தில், சென்னை வந்த ரஜினி இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில், அளித்த அவர் நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது, அடிபட்டால் அவர்களுக்கு தானே காயம் ஆகும். இளைஞர்களுக்கு படிப்பதில் மட்டும்தான் முழு கவனம் இருக்க வேண்டும். படிக்கிற டைம்ல படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் ஏற்படும்.

அது மட்டும் மனதில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் படிப்பில் மட்டும் தீவிர சிந்தனையை செலுத்த வேண்டும். உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த டைம் இல் இளைஞர்களுக்கு முதலில் சொல்வது தயவு செய்து இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கும் கஞ்சா இதில் எல்லாம் நீங்கள் அடிமையாகாதீர்கள். அதில், அடிமையானால் உங்கள் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும்.

அது நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் சம்பந்தப்பட்ட தாய், தந்தை மற்றும் குடும்பம் என எல்லோருடைய வாழ்க்கையும் நாசமாக்கிவிடும். அதனால், அது போன்ற நண்பர்கள் கிடைத்தால், அவர்கள் கிட்ட கூட போகாதீர்கள். தூர விலகி விடுங்கள் என்று ரஜினி பேசினார். அப்போது, விஜயின் ஜனநாயகன் படம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சாரி கருத்து சொல்ல விரும்பல என நடிகர் ரஜினி பதில் கொடுத்துள்ளார்.

